Followers

Saturday, August 11, 2012

பிஸ்தா பருப்பு சாப்பிட்டால் செக்ஸ் உணர்வு அதிகரிக்குமாம்





சத்து நிறைந்த பிஸ்தா பருப்பில் ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கும் சக்தி இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிஸ்தா பருப்பைச் சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பு அளவு குறையும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிஸ்தா பருப்புகளில் ஓமேகா-3 வகை கொழுப்பு உள்ளது. இது ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது எனவே, இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாமாம்.

செக்ஸ் உணர்வு குறைபாடு இக்காலத்தில் பரவலாக ஆண்களிடம் காண்ப்படுகிறது என்கிறது புள்ளி விவரம். இந்த உறவில் ஆர்வம் இன்மை, எழுச்சி குறைபாடு போன்ற காரணங்களினால் பெரும்பாலோனோர் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற தாம்பத்ய உறவில் பிரச்சினை உள்ளவர்கள், பிஸ்தா பருப்பை சாப்பிடலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கச் செய்வதில் டெஸ்ட்டோஸ்டீரான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த டெஸ்ட்டோடிரானை மருந்துகளால் அதிகரிக்க முடியாதாம்.. டெஸ்ட்டோடிரானை அதிகரிக்கச் செய்வதில் பிஸ்தாவின் வேலை படு சுத்தமாக இருக்குமாம். தன் ஐந்தாவது வயதில் பழுக்கத்தொடங்கி 200 வயது வரை ஓயாது கனி ஈனும் பிஸ்தா ஈடு இணையற்றஇயற்கை வயாகராவாகி அரிய பயனைத் தருகிறது

தாம்பத்ய உறவில் ஈடுபடமுடியாத 38 வயது முதல் 59 வயது வரை உடைய 17 ஆண்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு தினசரி 3.5 அவுன்ஸ் அளவிற்கு பிஸ்தா பருப்பு கொடுக்கப்பட்டது. மூன்று வாரங்கள் பிஸ்தா கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களின் டெஸ்ட்டோடிரன் சுரப்பின் அளவு அதிகரித்திருந்தது தெரியவந்தது. இதன் மூலம் பிஸ்தா பருப்பானது ஆண்களின் செக்ஸ் உணர்வினை அதிகரிக்கச் செய்கிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Popular Posts

Popular Posts

Pages