நான் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறேன். கல்லூரி ஆண்டு விடுமுறை அப்போதான் நான் வீட்டுக்கு செல்வது வழக்கம். இரண்டு மூன்று நாட்கள் லீவு என்றால், இதே ஊரில் எங்கள் தூரத்து உறவு முறை அத்தை இருக்காங்க, அவங்க வீட்டுக்கு சென்று தங்கி விடுவேன். இப்படி தான் என் காலம் ஓடும். நான் தங்கி இருக்கும் காச்டல் அறையில் இன்னொரு பெண்ணும் இருக்கிறாள். அவள் பெயர் ஆஷா. அவள் முடியை நன்கு ஷார்டாக கட் செய்து இருப்பாள், ஆண்களை போல, எப்போதும் ஜீன்ஸ், ஷர்ட் என்றுதான் அணிவாள். அவ்வப்போது சிகரெட் பிடிப்பாள். பைக் ஓட்டுவாள். சொல்லபோனால் அவளை எங்கள் காலேஜில் டாம்பாய் என்று சொல்லுவார்கள்.
அவள் வந்த புதிதில் எனக்கு அவளோட நடவடிக்கைகள் பிடிக்காமல் தான் இருந்தது. அவளை கிண்டல் செய்ய, அவள் என் ரூம் மேட என்பதால் என்னையும் சேர்ந்து கிண்டல் செய்ய எனக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. நான் அவளிடம் வெகு நாள் பேசவே இல்லை. என் ரூமை மாற்றி தர எங்கள் ஹாஸ்டல் வார்டனிடமும் கேட்டு விட்டேன். அனால் ஒன்றும் நடக்கவில்லை. அவளுடன் இருப்பதே எனக்கு அருவருப்பாக இருந்தது. அபோதுதான் இது நடந்தது. ஒரு நாள் சில மற்ற காலேஜ் பசங்க எங்க காலேஜுக்கு வந்து ஒரு பெண்ணிடம் கலாட்டா செய்ய, அவள் பயந்து போய் கிடக்க, நாங்கள் எல்லோரும் செய்வதறியாது பயந்து போய் இருந்தோம். அப்போதுதான் ஆஷா அங்கே ஆஜாரானாள்.
அவள் அந்த பெண்ணின் கையை பிடித்தவனிடம், சென்று, கையை விட சொல்ல, அவன் இவளை பார்த்து ஏளனமாக சிரிக்க, அவனுக்கு விட்டாள் பாரு ஒரு அறை , அவன் அப்படியே சுருண்டு விழுந்து விட்டான். எல்லோரும் திகைத்து போய் நிற்க, இன்னொருவன் சுருண்டு விழுந்தவனை எழுப்ப வர, அவனுக்கும் ஒரு கராத்தே உதை விட, அவனும் தன் தாடையை பிடித்து கொண்டு பின் வாங்க, அங்கே இருந்தவங்க எல்லோரும் துணியை காணோம், துண்டை காணோம் என்று நொடியில் மறைந்து போனார்கள். ஆஷா அங்கே சுருண்டு விழுந்தவனின் கையை ஒரு துப்பட்டாவால் கட்டி அதை ஒரு தூணில் கட்டிவிட்டு திரும்பி பார்க்க, எங்க கல்லூரி பிரின்சிபால் நின்தூர் கொண்டு இருந்தாங்க.
அவங்களிடம் விஷயத்தை எல்லோரும் சொல்ல, ஆஷாவை வெகுவாக பாராட்டினாங்க. அப்போதுதான் ஆஷாவின் ரூம் மேட் என்பதில் எனக்கு பெருமையாக இருந்தது. நான் ஓடி சென்று அவளை கட்டி பிடித்தேன். அவளும் என்னை நன்றாக கட்டி பிடித்து என் கன்னத்தில் முத்தமிட்டாள். அது அவள் சாதாரணமாக செய்தாளோ என்னவோ எனக்கு தெரியாது, ஆனால் எனக்கு அது ஜிவ்வ்வ்..என்று இருந்தது, என் உடம்பை என்னவோ செய்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்க்கப்புறம் ஆஷாதான் கல்லூரி ஹீரோ, நான் அவள் பெஸ்ட் பிரெண்ட்.
ஒரு வாரம் ஆஷாவுடன் நான் நன்றாக பழகிவிட்டேன். அவள் என்னை ஷாபிங் கூட்டி சென்றாள், ஹோட்டலுக்கு கூட்டி சென்றாள், நான் பார்க்காத பல இடங்களுக்கு கூட்டி சென்றாள். எனக்கும் அவளுடன் இருக்கும் போது சுகமாக இருந்தது. அந்த பந்தத்தை என்ன வென்று சொல்வது என்றே எனக்கு புரியவில்லை. ரொம்ப குழப்பமாக இருந்தது. அவள் என்னை அணைத்து கொண்டு போகும்போதும், என் கையை புடித்து கொண்டு ரோடு கிராஸ் செய்யும் போதும், எனக்கு அவளோடு ரொம்ப பாதுக்காப்பாக உணருவேன். அந்த உணர்வை ஒரு நாள் ரூமில் இருக்கும்போது, ஆஷாவிடம் நான் கூறினேன். அப்போது அவள் என்னை ஒரு பாசமான புன்னகையோடு பார்த்து கொண்டு இருந்தாள். நானும் அவள் கண்களை பார்த்து கொண்டு இருக்கையில், "கீதா, ஐ தின்க் வி ஆர் இன் லவ்" என்றாள்.
(தொடரும்...)
http://tamil-dinamalar.blogspot.com
http://tamil-dinamalar.blogspot.com
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.